2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தால் நடத்தப்படும் நடமாடும் பொலிஸ் சேவையின் ஓர் அங்கமாக 'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' எனும் தொனிப்பொருளிலாளான இரத்ததான முகாம், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தலைமையில் நாளை (16) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரீ.மகேஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து நடத்தப்படும் இந்த இரத்ததான முகாமில், இளைஞர், யுவதிகள், பொதுமக்களும்  கலந்துகொண்டு, தங்களது இரத்தத்தைத் தானமாக வழங்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .