Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர்ப்புறமெங்கும் “நீல நிற உணர்வின் சுவையைத் தொடமுடியுமா?” என, இரவோடிரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், இரவோடிரவாகவே அகற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தல் வெளியான அன்றிரவே, இத்தகைய சுவரொட்டிகள், மட்டக்களப்பு நகர், ஏறாவூர், வாழைச்சேனை, ஓட்டமாவடி உள்ளிட்ட பல நகர்ப்புறங்களில் இரவோடிரவாக ஒட்டப்பட்டிருந்தன.
எனினும், உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிய மறுநாள் காலையில் இத்தகைய சுவரொட்டிகள் எவற்றையும் அவை ஒட்டப்பட்டிருந்த இடத்தில் காணமுடியவில்லை.
இந்தப் பிரசுரங்கள் பிரபல்யமான பழம்பெரும் தேசியக் கட்சியொன்றைக் குறித்தே அதன் பெருமை கூறும் “நீல நிற உணர்வின் சுவையை தொடமுடியுமா?” என்ற வாசகத்தைத் தாங்கி ஒட்டப்பட்டிருந்ததாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இவை யாரால் ஒட்டப்பட்டன, யாரால் அகற்றப்பட்டன என்பது குறித்து வெளிப்படையாக எவரும் பேச விரும்பவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago