2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இராஜாங்க அமைச்சரை தூதுவர்கள் சந்தித்தனர்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி, க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட நோர்வே மற்றும் நெதர்லாந்து நாட்டு தூதுவர்கள், பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை, மட்டக்களப்பிலுள்ள அவரது அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (12) சந்தித்தனர்.

நோர்வே நாட்டுத் தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல், நெதர்லாந்து நாட்டுத் தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகிய இருவரும் இதன்போது இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள், அபிவிருத்திப் பணிகள் மற்றும் அரசியல் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராமிய மட்ட உட்கட்டமைப்பு  விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பிலும்  இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடினார்.

இவற்றுக்கான சாதகமான பதில்களை இரு நாட்டுத் தூதுவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .