2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

இரு குடும்பங்களுக்கிடையே மோதல்; நால்வர் கைது

Princiya Dixci   / 2021 ஜூன் 06 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கருங்காலிச்சோலை பிரதேசத்தில்  இரு குடும்பங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர்,  நேற்று (5) மாலை கைது செய்துள்ளனர் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். 

அப்பிரதேசத்தில் உறவினர்களான இரு குடும்பங்களின் பெண்களுக்குள்ளே  சம்பவதினமான நேற்று வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து, இரு குடும்பங்களின் ஆண்களுக்கிடையே சண்டை ஏற்பட்டதையடுத்து, பொலிஸார் இரு குடும்பங்களைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X