Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 மார்ச் 18 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரு வேறு பகுதிகளில், ஒரு மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதுடன், மற்றொரு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், இன்றும் (18) நேற்றும் (17) இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் ஓடாவியார் வீதியை அண்டியுள்ள வீட்டின் முன்னால் தாழ்வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு, இன்று (18) அதிகாலை 3.30 மணியளவில் இனந்தெரியாதோர் தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன், சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சந்திவெளிப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யமஹா ரக, கறுப்பு மற்றும் பச்சை நிறமுடைய சி.பி. பிஎப்எக்ஸ் 8689 இலக்க மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
திருட்டுப்போன இந்த மோட்டார் சைக்கிளைப் பற்றிய தகவல் அறிந்தோர், ஏறாவூர் பொலிஸாரின் 065- 2240487 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago