Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - ஏறாவூர் நகரசபை எல்லைப் பகுதியிலான கோவில்களுக்கு அருகில் இறைச்சிக் கடைகள் அமைந்துள்ளதால், பல்வேறு அசௌகரியங்களுக்குப் பொதுமக்கள் முகங்கொடுப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, நகர சபையால் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், சபையின் செயலாளர் முற. சியாஹுல் ஹக் உட்பட 5 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனரென, மேயர் ஐ. அப்துல் வாசித் தெரிவித்தார். மேற்படி குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஏறாவூர் நகர சபை எல்லைக்குள், கோவில்களை அண்மித்தப் பிரதேசங்களில் இயங்கிவரும் கோழி இறைச்சிக் கடைகளைத் தூர இடங்களுக்கு மாற்றுமாறு, நகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகர சபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே, உறுப்பினர்களான என். சுதாகரன், ஜி.பிரபாகரன், எஸ்.சுதாகராசா ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். இறைச்சிக் கடைகளானவை, கோவில்களின் புனிதத் தன்மைக்கு முரணாக இருப்பதுடன், அறுக்கப்பட்ட இறைச்சிக் கழிவுகளை நாய்களும் காகங்களும் எடுத்து வந்து கோவில் வளாகங்களினுள் போடுவதாக, விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இக்கடைகளைக் கோவில் எல்லையிலிருந்து குறைந்தது 100 மீற்றருக்கு அப்பால் அமைக்குமாறு, உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
56 minute ago