2025 மே 03, சனிக்கிழமை

இறைச்சிக்காகக் கொண்டுசெல்லப்பட்ட பன்றிகள் மீட்பு

Editorial   / 2020 மே 04 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து பொலனறுவைப் பகுதிக்கு, அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இறைச்சிக்காகக் கொண்டுவரப்பட்ட 09 பன்றிகளும் அவற்றை ஏற்றி வந்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரொருவரும், இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார் என, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயற்பாடுகளை பிடிப்பதற்கு பொலிஸார் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X