2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச இலக்கிய விழா கடந்த  திங்கட்கிழமை மாலை (26) உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதனும் கௌரவ அதிதிகளாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.எம்.ஜெய்னுலாப்தீன், கோட்டக்கல்விப் பணிப்பாளர்களும்; கலந்து கொண்டனர்.
நிகழ்வில், இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், பரிசில்களும் வழங்கப்பட்டன.

இவ் இலக்கிய விழாவில், பாடல், கவிதை, சிறுகதை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X