Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் வரிவருமான வரி மேற்பார்வையாளர் ஒருவர், பிரதேச சபையில் வைத்து கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், காணியொன்றில் வீடு கட்டுவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக அவரிடமிருந்து 25,000 ரூபாயை இலஞ்சமாக பிரதேச சபையில் கடமையாற்றிவரும் வரிவருமான வரி மேற்பார்வையாளர் கோரியதையடுத்து, இது தொடர்பாக அந்நபர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குளுவின் ஆலோசனையின் பிரகாரம், சம்பவதினமான இன்று நண்பகல் பகல் பிரதேச சபையில் வைத்து வரிவருமான வரி மேற்பார்வையாளருக்கு அந்நபர் இலஞ்சமாக 25,000 ரூபாயை வழங்கியபோது, அங்கிருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் உடனடியாக செயற்பட்டு, கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பை சேர்ந்தவர் எனவும் சந்தேகநபரை கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணையின் பின்னர் கொழும்பில் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
04 Jul 2025