2025 மே 09, வெள்ளிக்கிழமை

இலத்திரனியலில் வெளி நோயாளர் பிரிவின் நடவடிக்கை

Princiya Dixci   / 2022 மே 10 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் நூர்தீன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவின்  சகல நடவடிக்கைகளும் தற்போது இலத்திரனியல்  மயப்படுத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இலத்திரனியல் சுகாதார  அட்டை தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே, சிகிச்சைக்காக வரும் நோயாளிகள்  சரியான விவரத்தை பதிந்து இலத்திரனியல் அட்டையை பெற்றுக் கொள்வதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை அழைத்து வருபவர்கள் அவர்களுடைய பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது வைத்தியசாலையால் வழங்கப்படும் சிறுவர் ஆரோக்கிய மற்றும் விருத்திப் பதிவேட்டை  கொண்டு வருமாறும் டொக்டர் ஜாமீர் மேலும் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X