2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலவச வைத்திய முகாம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையின் 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பொதுமக்களுக்கான இலவச வைத்திய முகாமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக, ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

இந்த இலவச வைத்திய சேவைகள், ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23) காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரை இடம்பெறவுள்ளன.

இரத்தத்தில் சீனியின் அளவு (FBS), நிறை - உயரம் (BMI), இரத்த அழுத்தம், ஈ.சி.ஜி பரிசோதனை என்பனவற்றுடன், விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனை, நீரிழிவு நோய்க்கான மருந்துகள், நீரிழிவு நோயாளர்களுக்கு வழிகாட்டல் கைநூல் போன்றவை, 100 சதவீதம் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள், நேரடியாகவோ அல்லது 0777230125, 0652241389, 0652240808 ஆகிய இலக்கங்களினூடாகவோ தொடர்புகொண்டு, முற்கூட்டிய பதிவுகளைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .