Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை விவசாய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ், சிறுபோக நெற்செய்கையை மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, அரசாங்கத்தின் மூலம் இலவசமாக மூன்று வகையான உரங்கள், இன்று (20) வழங்கி வைக்கப்பட்டன.
வாழைச்சேனை கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட்; தலைமையில் நடைபெற்ற இலவச உரம் வழங்கும் நிகழ்வில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு உரங்களை வழங்கி வைத்தனர்.
வாழைச்சேனை விவசாய கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வாகனேரி திட்டத்தின் கீழ் உள்ள பெரிய நீர்ப்பாசன காணிகள், மாதுறுஓயா வடிச்சலில் புனானை மேற்கு கண்டங்கள், சிறிய நீர்ப்பாசன காணிகள் என 13,100 விவசாயிகளால், 4300 ஏக்கரில், சிறுபோக விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனை கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதேச உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட்; தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாகவும், நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமை காரணமாகவும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கால வேளையில் விவசாயிகள் விவசாய செய்கையை மேற்கொள்ள முடியும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, விவசாயிகள் சிறுபோகச் செய்கையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago