Suganthini Ratnam / 2016 ஜூலை 24 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இவ்வருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் 44 இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான அங்கிகாரம் கிடைத்துள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ், ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாகவும் சிறந்த வேலைத்திட்டமாகவும் நடைமுறைப்படுத்தும் இளைஞர் கழகங்களில் ஒன்று தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்படுமிடத்து அக்கழகத்துக்;கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இளைஞர்களுக்கான 'றியலிற்றி ஷோ' மற்றும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்பவற்றுக்கு முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் இறுதித்தினம் எதிர்வரும் 27ஆம் திகதியாகும். எனவே, இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கவுள்ள ஆர்வமுள்ள இளைஞர் கழகங்களும், 'றியலிற்றி ஷோ' நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள இளைஞர், யுவதிகளும் தங்களது திட்ட முன்மொழிவுகளை 27ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் அல்லது பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகஸ்தரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலதிக விவரங்களுக்கு மாவட்டக் காரியாலயம் 0652224376 அல்லது மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ் 0777874472 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago