Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 16 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில், இளைஞனொருவன் மடுவில் சிக்கி உயிரிழந்த சம்பவமொன்று, நேற்று(14) முன்தினம் இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தியாகராஜா கேதீஸ்வரன் என்ற இளைஞனே, சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
வவுணதீவு, சின்னகாலாபோட்டமடு கிராமத்திலுள்ள முள்ளண்ட பங்கு பகுதியில், ஆடு மேய்த்துவிட்டு, வீடு திரும்புவதற்காக சிறிய வாய்க்காலைக் கடக்கும் போது, வாய்க்காலில் இருந்த மடுவில் சிக்கியே, இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பிலான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சடலம், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .