Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில், மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு, ஓட்டமாவடி மாஞ்சோலை, ஹிழ்ரிய்யா ஜும்ஆ மஸ்ஜித்தில் நாளை மறுதினம் (22) மாலை 4 மணி தொடக்கம் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளதாக, ராபிதா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு பொது அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது.
சமகால முஸ்லிம் உலகில் எதிர்நோக்கப்படும் விவகாரங்கள், இஸ்லாமிய கொள்கை விளக்கங்கள், சகவாழ்வும் பண்பாட்டு விழுமியங்கள் உள்ளிட்ட இன்னும் பல விவகாரங்கள், இந்த எழுச்சி மாநாட்டில் எடுத்தாளப்படும் என்று, ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .