2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உணவகமொன்றின் சமையலறைக்குள் நாய்

Freelancer   / 2023 மார்ச் 08 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜவ்பர்கான் 

 உணவகமொன்றின் சமையலறையில் வளர்ப்பு நாயை வைத்துக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலுள்ள உணவகமொன்றிலேயே நாய் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கிசாந்தராஜ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலுள்ள உணவு விடுதிகள்  சிற்றுண்டி சாலைகள் வெதுப்பகங்கள் பொதுச்  சுகாதார அதிகாரிகளினால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதன்போது உணவின் தரம் உணவுப் பொருட்களின் காலாவதி தினம் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களின்  லேபல் உள்ளிட்ட உணவப் பாதுகாப்பு சட்டததை மீறும் வகையில் வைக்கபட்டிருந்த உணவுப் பொருட்கள் சோதனையிடப்பட்டன.

மேலும், இதில் சமையலறையில் நாய் வளர்த்த வர்த்தகர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .