2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

உணவில் பல்லி; சிற்றுண்டிச்சாலைக்கு பூட்டு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நேற்றைய தினம் நோயாளியொருவர் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

இது தொடர்பில் இன்றைய தினம் (25) போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிபதி, குறித்த சிற்றுண்டிச்சாலையை தறிகாலிமாக மூடுவதற்கான உத்தரவை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .