Princiya Dixci / 2021 ஜூன் 20 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச ஜும்ஆப் பள்ளிவாசல் உண்டியல், சில தினங்களுக்கு முன்னர் உடைக்கப்பட்டிருந்தது.
இந்த உண்டியலில் இருந்த பணத்தைத் திருடிய சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய இளைஞன், ஹெரோய்ன் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸாரின் உதவியுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடமிருந்து சுமார் 2,250 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பட்டுள்ளது. சந்தேகநபர், பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்தவர் என்றும் ஏறாவூரில் திருமணம் முடித்துள்ளார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளிவாயல் உண்டியலை உடைத்துத் திருடியமை தொடர்பிலும் போதைப்பொருளை வைத்திருந்தமை தொடர்பிலும் வாழைச்சேனைப் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .