Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - கொழும்புக்கிடையில் கடந்த 12 நாட்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த “உதய தேவி” ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென, மட்டக்களப்பு ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
“உதய தேவி” ரயில் சேவை, தினமும் காலை 6.10க்கு மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு, பிற்பகள் 3.15 மணியளவில் கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
அதேபோன்று தினமும் காலை 6.05க்கு கொழும்பு, கோட்டையிலிருந்து புறப்பட்டு, பிற்பகள் 2.45 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும்.
இந்த புகையிரத சேவையில் மூன்றாம் வகுப்பு இருக்கைகள் மாத்திரமே உள்ளன. இதற்கான ஒரு வழிக்கட்டணமாக 230 ரூபாய் அறவிடப்படுவதாக, அவ்வதிகாரி தெரிவித்தார்.
மேற்படி “உதய தேவி” ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்ததால், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், அரச அதிகாரிகள் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025