2025 மே 14, புதன்கிழமை

உதவிகோரி நிதி வசூலிப்போர் தொடர்பில் எச்சரிக்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியான கடிதத் தலைப்புகளுடன் உதவிக்கோரி, நிதி வசூலிப்போர் தொடர்பில், எச்சரிக்கையாக இருக்குமாறு, ஏறாவூரின் பொது அமைப்புகள், பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நோய்க்கான சிகிச்சைக்கு நிதியுதவி, பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளுக்கு உதவிகோரல், பொதுக்  கட்டடங்கள் நிர்மாணத்துக்கு, வாழ்வாதாரத் தொழிலைத் தொடங்க, அநாதைகளைப் பராமரிக்க, வழிபாட்டுத் தலங்களை அமைக்க, சமயச் சடங்குகளை மேற்கொள்ளல் போன்று, பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்து நிதி வசூலிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து பலர் போலியான கடிதத் தலைப்புகளுடன் நடமாடுவதால், இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி வசூலிப்போர் வரும்போது அவர்கள் கூறும் விடயங்கள் உண்மையானவையாயென, உறுதிப்படுத்திக்கொண்டு உதவிகளை வழங்குமாறும், அந்த  வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, திருமணம் முடிப்பதற்கென வெளியூர்களில் இருந்து பள்ளிவாசல்களின் கடிதத் தலைப்புக்களுடன் வருவோர் தொடர்பிலும், கவனத்தைச் செலுத்தி, சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகத்துடன் அல்லது ஊரின் பொது அமைப்புகளுடனும் தொடர்புகொண்டு திருமணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்கள் கூறும் விடயங்கள் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருமண ஏற்பாடுகளைச் செய்வது ஏமாற்றங்களையும் மோசடிகளையும் தவிர்க்க சிறந்த வழி வகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .