Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்.
இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் உப்போடையில் தையல் பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று(31) கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு குறித்த தையல் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், மாணவர்கள் தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாகவும், அவர்களை அதிலிருந்து மீட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் பெற்றார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும்,சிறந்த வழிகாட்டலை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தையல் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கான தையல் இயந்திரங்களும் பிரதம அதிதியால் கையளிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
9 hours ago