2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உமிழ்நீர்ச்சுரப்பியிலிருந்து கல் அகற்றப்பட்டது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின்போது, நாக்கின் கீழ்ப்பகுதி உமிழ்நீர்ச் சுரப்பியிலிருந்து 5 சென்ரிமீற்றர் நீளமும் 25 கிராம் எடையும் கொண்ட கல் ஒன்று அகற்றப்பட்டதாக அவ்வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த கச்சி முஹம்மது முபாறக் (வயது 47) என்பவர், உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை (30) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இக்கல் அகற்றப்பட்டது.

வாய்க்குள் சத்திரசிகிச்சை செய்து கல் அகற்றுவது அபூர்வமாக நடக்கும் சம்பவம் என்பதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இது இரண்டாவது சம்பவம் எனவும் வைத்திய நிபுணர்கள் கூறினர்.

வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த சத்திர சிகிச்சை மூலம் நோயாளி தற்போது சுகதேகியாக உள்ளார். இக்கல் ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X