2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உயிரிழந்த வர்த்தகர் தொடர்பில் விசாரணை

Gavitha   / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

தன்னை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு, முச்சக்கரவண்டியில் ஏறி, வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னரே உயிரிழந்த வர்த்தகர் தொடர்புடைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார், புதன்கிழமை (09)  தெரிவித்தனர்.

காத்தான்குடி 5 ஆதம்போடி ஹாஜியார் வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான எம்.அபூதாஹீர் (வயது 59) என்ற வர்த்தகர், முகத்தை மூடிக்கொண்டு, முச்சக்கரவண்டியொன்றுக்குள் ஏறி தன்னை வைத்திசாலைக்குக் கொண்டுச்செல்லுமாறு தெரிவித்துள்ளார். எனினும் அவர் வைத்தியசாலைக்குச் செல்வதற்கு முன்னரே உயிரிழந்து, சடலமாகவே காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில், முச்சக்கரவண்டி சாரதியிடம் நடத்திய விசாரணைகளின் போதே, இது குறித்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர், முச்சக்கரவண்டியில் ஏறும் போது, முகத்தல் இரத்தம் தோய்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இவர் மாரடைப்பு அல்லது விபத்து காரணமாகவா உயிரிழந்தார் என்பது தொடர்பில் விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X