2025 மே 10, சனிக்கிழமை

உயர்தர மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Freelancer   / 2022 மார்ச் 31 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான நாடக பயிற்சிப்பட்டறை முனைக்காடு, காஞ்சிரங்குடா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

கூத்தம்பலம்  கலைப் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இப்பயிற்சிப்பட்டறை இடம்பெற்றுள்ளது. 

இவ்வாண்டு க .பொ.த உயர்தர நாடகமும் அரங்கியலும் செய்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பெறுபேறினை அதிகரிப்பதனை நோக்காக கொண்டு ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பட்டறையில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

கூத்தம்பலம் கலைப் பண்பாட்டு மையத்தினுடைய நிறைவேற்றுப் பணிப்பாளர் அ. விமல்ராஜ் வழிப்படுத்தலில் நடைபெற்றுள்ள இப்பயிற்சி பட்டறையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வளவாளர்களாக செயற்பட்டுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X