2025 மே 15, வியாழக்கிழமை

உயர்தர வகுப்பு மாணவியின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் மிதந்த நிலையில், க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர், இன்று (30) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் கிராமத்தைச் சேர்ந்த வசந்தராஜா தேவஜானி (வயது -18) என, அடையாளம் காணப்பட்டுள்ளாரென, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவி, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில், உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து, கல்லடி, விவேகானந்தா மகளிர் கல்லூரியில் உயர்தர வர்த்தப் பிரிவில் படித்து வந்துள்ளார்.

இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை (28), தனது சொந்த ஊரான கித்துள் கிராமத்துக்குச் செல்வதாக, வசித்துவரும் உறவினர் வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவல்களை வைத்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரணம், தற்கொலையா அல்லது கொலையா என, காத்தான்குடிப் பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .