2025 மே 14, புதன்கிழமை

உரமானியம் வழங்கல்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரசேத விவசாயிகளுக்கான உரமானியங்கள், மகாவலி அதிகார சபையின் ரிதிதென்ன உரக் களஞ்சியசாலையில் வைத்து, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமாரால், நேற்று முன்தினம் (03) மாலை விநியோகிக்கப்பட்டன. 

கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஓமடியாமடு, ரிதிதென்ன, ஜெயந்தியாய பிரதேசங்களுக்கான உரமானியம், போக்குரவத்துப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, அப்பிரதேசங்களிலேயே விநியோகிப்பதற்கு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரால் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாவட்டத் தேசிய உரச் செயலக உதவிப் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .