2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சி ஆளுகை செயற்றிட்டம் தொடர்பான பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 17 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் ஆசியா மன்றம், உள்ளூராட்சி மன்றங்களில் புதிதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூராட்சி ஆளுகை செயற்றிட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை  நாளை வெள்ளிக்கிழமையும் நாளை மறுதினம் சனிக்கிழமையும் மட்டக்களப்பு ஈஸ்ட் லகுன் ஹோட்டலில் நடைறெவுள்ளதாக ஆசியா மன்றத்தின் செயற்றிட்டத்துக்கான  தொழில்நுட்ப நிபுணர்; எம்.ஐ.எம்.வலீத் தெரித்தார்.

ஆசியா மன்றத்தின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் ஏ.சுபாகரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிப்பட்டறையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் உள்ளூராட்சி ஆணையாளர்கள், உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள், இரண்டு மாகாணங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட 12 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X