Princiya Dixci / 2022 மார்ச் 13 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உளநல மையம், கல்லடியில் வெள்ளிக்கிழமை (11) திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் உளநல துறைக்குப் பெறுப்பான பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரொகான் ரத்நாயக்க கலந்துகொண்டார்.
அத்துடன், நிகழ்வின் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்திய நிபுணர்களான ரீ.கடம்பநாதன் மற்றும் ஆர். கமல்ராஜ் அகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உளநலம் தொடர்பான அனைத்து விடயங்களின் தேவையின் நிமிர்த்தம் அதனை மேம்படுத்துவதற்காகவே குறித்த தனித்துவமான புதிய உளநலம் மையத்தினை திறந்ததாக, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
அத்தோடு, இந்த மாவட்டத்தில் காணப்படுகின்ற தற்கொலைகள், குற்றச்செயல்கள், போதைப்பொருளுக்கு அடிமையாகுதல் ஆகயனவற்றின் எண்ணிக்கையை குறைக்க முடிவதுடன், இளவயது கற்பங்களை தடுத்தல் என அனைத்துக்கும் இந்த உளநல துறையின் ஊடாக தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .