2025 மே 07, புதன்கிழமை

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இளைஞன் கைது

எம்.எம்.அஹமட் அனாம்   / 2020 பெப்ரவரி 09 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட குடும்பிமலை காட்டுப் பகுதியில் வைத்து, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் நேற்று (08) மாலை, இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, வாழைச்சேனை வட்டார வனவள உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் தெரிவித்தார்.

வாழைச்சேனை வட்டார வனவள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே, சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய மேற்படி இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காடுகளிலிருந்து சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், மணல் அகழ்வு, மிருகங்களை வேட்டையாடுதல், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருத்தல் போன்ற நடவடிக்கைகளால், வனவள உத்தியோகத்தர்களால் தமது கடமைகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டி உள்ளதாகவும், வாழைச்சேனை வட்டார வனவள உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X