2025 மே 01, வியாழக்கிழமை

உழவு இயந்திர சில்லுக்குள் சிக்கி விவசாயி பலி

Editorial   / 2020 ஜூலை 15 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம்

மட்டக்களப்பு - வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவு, 38ஆம் கிராமத்தில், வேளாண்மை அறுவடையில் ஈடுபட்டு விட்டு, உழவு இயந்திரத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்த விவசாயி ஒருவர், எதிர்பாராத விதமாக உழவு இயந்திரத்தில் இருந்து தவறி, சில்லுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (14) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், குடும்பஸ்தரான 4 பிள்ளைகளின் தந்தை வெல்லாவெளி 40ஆம் கிராமம் வம்மியடியூற்றைச் சேர்ந்த நல்லையா நாகேந்திரன் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துத் தொடர்பாக, தனக்கு அருகில் நபரை அமர்ந்திருக்கச் செய்து உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த சாரதி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .