Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில், இளம் குடும்பஸ்தர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு பொலிஸ் பிரிவின் பண்டாரியாக்கட்டு வயல் பகுதியில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வேப்பவெட்டுவான், கிராமத்ததைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்ததையான உதயராசா மயூரன் (வயது 27) என்பவரே பலியாகியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவர், தனது தந்தையின் நெல் வயலை உழுது பண்படுத்துவதற்காக நேற்று முன்தினம் (08) மாலை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தைச் ஓட்டிச் சென்று, நெல் வரப்புக் கட்டில் ஏறும்போது உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளது.
அச்சந்தர்ப்பத்தில் இவர் உழவு இயந்திரத்தின் கீழே நசுங்குண்டு படுகாயமடைந்துள்ளார்.
அங்கிருந்தவர்கள், அவரை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் எடுத்துச் செல்கையில் இடைவழியில் அவர் மரணித்துள்ளார்.
விபத்து பற்றிய மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
30 Apr 2025
30 Apr 2025
30 Apr 2025