Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஆர்.ஜெயஸ்ரீராம் / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணையடியில் அடியார்கள் பயணம் செய்த உழவு இயந்திரமொன்று, இன்று (24) காலை விபத்துக்குள்ளானதில், 18 பேர் காயமடைந்துள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணையடி விஷ்ணு ஆலயத்தின் மகோற்சவ விழாவின் இறுதி நாளையொட்டி, கல்குடா கடலில் தீர்த்தோற்சவத்தை நிறைவேற்றி விட்டு, ஆலயம் நோக்கி, உழவு இயந்திரத்தில் பயணம் மேற்கொண்ட அடியார்களே இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
உழவு இயந்திரமானது, தமது வேகக் கடடுப்பாட்டை இழந்து தடம் புரண்டமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் எழுவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர்கள், வாழைச்சேனை அதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரமும் வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
17 Jul 2025
17 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Jul 2025
17 Jul 2025