2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஊடகவியலாளருக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஜூன் 01 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்  நினைவேந்தல் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கான நீதி கோரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபி முன்பு சனிக்கிழமை (31) மாலை நடைபெற்றது.

2024 மே மாதம் 31ம் திகதி காலை நாட்டுப்பற்றாளர் நடேசன் மட்டக்களப்பிலுள்ள தனது வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். அவரது படுகொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை நீதியான விசாரணை செய்து குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் மற்றும் வடக்கு கிழக்கு தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட நடேசனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர் அமைப்பு, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

பேரின்பராஜா சபேஷ்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .