Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 மே 20 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு, மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக, நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முறுத்தானை, மினுமினுத்தவெளி கிராம மக்களுக்கு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக இரண்டாம் கட்ட நிவாரணங்கள் வழங்கப்பட்டன.
இதன்கீழ், 45 குடும்பங்களுக்கான 1,200 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் நேற்று (19) மாலை வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிவாரணம் வழங்குவதற்கான நிதியுதவிகளை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.
நிகழ்வில் கிரான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செயலாளர் செ.நிலாந்தன்,பொருளாளர் பு.சசிகரன், ஊடகவியலாளர்களான கு.சுபோஜன், ந.நித்தியானந்தன், கு.குணலிங்கம், வாசம் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன், கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு, நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .