2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஊடகவியலாளர் மோகனதாஸ் காலமானார்

Editorial   / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, துறைநீலாவணை கிராமத்தை சேர்ந்த ஆசிரியரும், ஊடகவியலாளருமான  பாக்கியராசா மோகனதாஸ்   சனிக்கிழமை(23) இறைபதம் எய்தினார். இறக்கும் போது அவருக்கு வயது 34 ஆகும்.

 பாக்கிராசா சிவராணி தம்பதிகளின் மூத்த புதல்வரான இவர்,   சம்மாந்துறை மத்தியகி கல்லூரியில் (தேசிய பாடசாலை) ஆசிரியராகவும் கடமையாற்றி வருகின்றார்.

ஊடகத்துறையில் செய்திகளை மட்டுமன்றி பல கட்டுரைகளையும் எழுதி பல தடங்களில் தன்னை பதிவு செய்துகொண்டுள்ளார்.  இவருக்கு  கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  இளம் கலைஞர் விருது வழக்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 துறைநீலாவணை தேசிய பாடசாலை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற்கலை நிறுவனத்தின் பழைய மாணவரான இவர், 74 கலைப் படைப்பாளிகளை நேர்காணல் செய்து  “படைப்பாக்கல் ஆளுமைகள்” எனும் நூலை திருகோணமலையில் வைத்து கடந்தமாதம் வெளியீட்டு வைத்தார்.

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். (வ.சக்திவேல்,க.விஜயரெத்தினம்)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X