2025 மே 26, திங்கட்கிழமை

எத்தனோல் உற்பத்தி நிலையத்துக்கு எதிராக நாளை இருவேறு ஆர்ப்பாட்டங்கள்

Suganthini Ratnam   / 2017 மே 18 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கல்குடா எத்தனோல் உற்பத்தி நிலையத்தின்; நிர்மாணப் பணியை நிறுத்துமாறு கோரி இருவேறு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி நகரில் நாளை ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கிளை ஒட்டியுள்ள சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'கலாசார, குடும்பச் சீரழிவுகளை உருவாக்கி சமுதாயத்தைக் கெடுக்கும் எத்தனோல்  உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணியை உடன் நிறுத்தக் கோருவோம், மதுவை எதிர்;த்து சமுதாய நலன் காப்போம்'  என்று எழுதப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்குடா ஜம்மிய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நாளை  ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என மேற்படி சபையின்; செயலாளர் ஏ.எம்.இஸ்ஸத் அஹமத் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைந்து இந்த எத்தனோல்  உற்பத்தி நிலையத்துக்கு எதிராகக் குரல் கொடுக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்சமயத் தலைவர்கள் மற்றும் அனைத்துச் சமூக  அரசியல்வாதிகளும் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆர்ப்பாட்ட இறுதியில் போதைப் பாவனையைத் தடுப்பது தொடர்பில் பல்சமயத் தலைவர்களின் சொற்பொழிவு நடைபெறும் எனவும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X