Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளாரென, கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரது பிறப்பின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டிய, சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலைவிழாவும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்கே, தமது கட்சித் தலைவர் வருகை தரவுள்ளாரென, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு, மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சனிக்கிழமை (07) காலை இடம்பெறவிருப்பதாக, அந்நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு அரசியல்வாதிகள், அறிவியலாளர்கள், அருளாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் அரசியலாளர் அதிஉயர் அதிதியாக அழைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
28 minute ago
29 minute ago