2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

எரிபொருள் நெருக்கடிக்கு உழவுவேலைகள் ஆரம்பம்

Editorial   / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா


நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவுவேலைகள் ஆம்பமாகியுள்ளன.

எனினும், அதற்கான செலவுகளும் பாரியளவில் அதிகரித்துள்ளன.

உழவு வேலைக்கென எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைவாக பிரத்தியேக வரிசையில் வைத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் விநியோகிக்கப்படுகின்றன.
 
1 லீற்றர் டீசல் 340 ருபாவாக அதிகரித்துள்ளமையால், ஒரு ஏக்கர் உழவுவதற்கு உழவு இயந்திரத்துக்கான கூலி 6,000 ரூபாவிலிருந்து 12,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.  டீசல் பிரச்சினையால் உழவமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என பல உழவு இயந்திரகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

விதைப்பதற்கான கூலி 1,500 ரூபாவிலிருந்து 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. அதேவேளை, வரம்பு கட்டுவதற்கான கூலி 2,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
1 புசல் விதைநெல்லுக்கு 1,000ருபாவால் கூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 கடந்த முயையைப்  போலவே இரசாயனப்பசளை இம்முறையும் கிடைக்கவில்லை.
 எனினும், கடந்த தடவை கள்ளச்சந்தையில் 1 மூடை யூரியா 35ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. யூரியா  இட்டு நெற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு விளைச்சல் அதிகமாகவிருந்தது.  யூரியா இம்முறை 50ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதுவும் கிடைக்கவில்லை என யூரியாவுக்கு பழக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .