2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஏப்ரலில் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும்

Niroshini   / 2016 மார்ச் 22 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'கிழக்கு மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் மற்றும் தாதியர் பற்றாக்குறைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிவர்த்திக்கப்படும்' என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

பாலியல் அடிப்படையிலான வன்முறையைக் குறைக்கும் மையத்தை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் திங்கட்கிழமை (21) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எதிர்வரும் ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகப்பிரிவிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்ற 27 தாதியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதே போன்று வைத்தியர்களும் நியமிக்கப்படவுள்ளார்கள்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் இவ்வாண்டின் வரவு-செலவு திட்டத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இருபது மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளேன். அதே போன்று ஆளணியையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X