Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 மார்ச் 09 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் கீழுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலை, ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்படுவதோடு கிழக்கு மாகாணத்திலேயே நவீன மருத்துவ வசதிகளைக் கொண்டமைந்தததாக இந்த வைத்தியசாலை மிளிரும்' என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
'ஏறாவூர் ஆதார வைத்தியசாலையையினூடாக மூவின மக்களும் பயனடைந்து வருகின்றனர். இவ்வைத்தியசாலையில் மூவினங்களைச் சேர்ந்த சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கடமைப் புரிகின்றார்கள்.
எனினும், இவ்வைத்தியசாலையில், ஆளணிப் பற்றாக்குறையும் நெருக்கடியாக அதிகரித்துள்ளது.
இடப்பற்றாக்குறை என்பது பாரிய பிரச்சினையாக உள்ளதால் அதற்குத் தீர்வு காணவே நாம் பல திட்டங்களைத் தீட்டியுள்ளளோம்' என்றார்.
தூர நோக்கில் இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் பற்றிய திட்டமிடல் வரைவு எம்மிடமுள்ளது.
அதனடிப்படையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை கிழக்கு மாகாணத்திலேயே சிறந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட நவீன வைத்தியசாலையாகத் திகழும்.
எனவே தற்போதுள்ள குறைநிறைகளைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான முயற்சிகளில் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
6 hours ago