Suganthini Ratnam / 2016 ஜூலை 05 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் மின் பொறியியலாளர் பிரிவின் கீழ் மின் விநியோகிக்கப்படும் பல கிராமங்களில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மின்விநியோகம் தடைப்பட்டு, திடீரென்று அதி அழுத்த மின் விநியோகம் மின்சுற்றில் பாய்ச்சப்பட்டதால், மின்னியல் சாதனங்கள் செயலிழந்துள்ளதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்தனர்.
இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட இலத்திரனியல்; சாதனங்கள் செயலிழந்துள்ளன.
செங்கலடி, எல்லை நகர், கணபதி நகர், விடுதி உள்ளிட்ட இடங்களில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் மின் பாவனையாளர்கள் கூறினர்.
இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த இலத்திரனியல் சாதனங்களான கணினிகள், வழிபதனப்படுத்திகள் (ஏசி), படப்பிரதி இயந்திரங்கள், பக்ஸ் இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் செயலிழந்துள்ளன.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பிராந்திய காரியாலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர்கள் தெரிவித்தனர்.


7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago