Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் காணிப்பயன்பாட்டு செயற்றிட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப்பயன்பாட்டு திட்டமிடல் உத்தியோகஸ்தர் மல்லிகா தாஹிர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் மாதிரிக்காக இப்பிரதேசத்தில் 25 குடும்பங்களின்; சுமார் 8 ஏக்கர் காணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும்; அவர் கூறினார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் கிராம காணிப்பயன்பாட்டு விழிப்புணர்வுக் கூட்டம், ஏறாவூர் முஹாஜிரீன் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, பயன்தரு மரக்கன்றுகளும் இயற்கைப்பசளையும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'நிலத்தைப் பயன்படுத்தாமல் கட்டாந்தரையாக விடக்கூடாதென்ற காணிப்பயன்பாட்டுத் திணைக்களத்தின் நோக்கத்துக்கமைய, அத்திணைக்களம் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.
விழிப்புணர்வுப் பயிற்சி, கள விஜயம்;, வீட்டுத்தோட்டம், நிலையான பயிர்கள் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்த்தல், நிலத்தை முழுமையாகப் பயன்படுத்துதல், இயற்கை வனப்பை அதிகரித்தல், இயற்கைப்பசளை உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களாகும்' என்றார்.
'பாழடைந்து கிடக்கின்ற நிலத்தைப் பயன்படுத்தி நன்மையடைய வேண்டும். நிலத்தைப் பராமரிக்காது விடுவதால், அது பிரயோசனமற்று சூழலுக்கும் தீங்காக அமையும். எனவே, நிலத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி சுற்றுச்சூழலை பேணுவதுடன், பொருளாதார வளத்தையும் ஈட்டலாம். மேலும், எமது சொந்த நிலங்களில் இயற்கையான முறையில் விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற மரக்கறிகள், தானியங்களை உற்பத்தி செய்து உட்கொள்வதன் மூலம் தேக ஆரோக்கியத்தையும் பேணமுடியும்' எனவும் அவர் கூறினார்.

29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
39 minute ago
48 minute ago