Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 08 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகர காட்டுப்பள்ளி வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.றிஷ்வி முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இச்சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மேற்படி வீட்டின் கூரை ஓடுகளைக் கழற்றிக்கொண்டு நுழைந்த திருடர்கள், பணப் பையிலிருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு தங்கச் சங்கிலிகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
அத்துடன், அவ்வீட்டிலிருந்த 33 வயதுடைய தாய் மற்றும் அவரது 17 வயதுடைய மகள் மீது கத்தியால் வெட்டி காயம் ஏற்படுத்திவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்கச்சங்கிலிகளை திருடர்கள் அறுத்தெடுத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில்,
அவர்கள் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸார், 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கைதுசெய்ததுடன், அவ்வீட்டில் திருடப்பட்ட அலைபேசியையும் அவரிமிருந்து கைப்பற்றினர்.
இச்சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, 42 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
எனினும், இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி திருடப்பட்ட நகைகளும் பணமும் பிரதான சந்தேக நபரிடம் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்;ட மற்றும் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்கள்; ஏற்கெனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று விசாரணையில்; தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025