2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஏறாவூர் வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் 3ஆவது மாடி மகப்பேற்று விடுதியின் நிர்மாணப் பணியை பூர்த்திசெய்வதற்காக 1 கோடியே 30 இலட்சம் ரூபாயை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஒதுக்கீடு செய்துள்ளதாக முதலமைச்சர் செயலகம் தெரிவித்தது.

நீண்டகாலமாக பூர்த்திசெய்யப்படாமல் இருக்கும்  மகப்பேற்று விடுதியின் நிர்மாணப்பணி வேலையை  உடனடியாக ஆரம்பிக்குமாறும் முதலமைச்சர் பணித்துள்ளார்.

இதேவேளை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவை ஸ்தாபிப்பதற்காகவும் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  முதலமைச்சர் செயலகம் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X