2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஏறாவூர் சந்தையை சீரமைக்க ஆளுநர் பணிப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யுஹம்பத், ஏறாவூர் நகர சபையைக் கேட்டுக் கொண்டுள்ளதாக, அந்நகர சபையின் தவிசாளர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் மாதாந்தப் பொதுக் கூட்டம், அச்சபையின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (26) இடம்பெற்றது.

கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றிய தவிசாளர் நழீம் மேலும் தெரிவிக்கையில், “ஏறாவூர் பொதுச் சந்தைதையைப் புனரமைத்துப் பராமரிக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக அங்கு சிரமதானப் பணி இடம்பெறவுள்ளது.

“இந்தச் சந்தை விவகாரம் சம்பந்தமாக ஆளுநருக்குத் தெளிவுபடுத்தப்பட்டதன் அடிப்படையில், உடனடியாக அந்த பொதுச் சந்தையை இயங்க வைக்கத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

“எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் சந்தை மீள இயங்குவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளுக்கும் தான் அங்கிகாரம் வழங்குவதாக ஆளுநர் நம்பிக்கையளித்துள்ளார்.

கட்டடத் திணைக்களத்தின் அல்லது பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஆதரவைப் பெற்று, இந்தப் பொதுச் சந்தையை மீளத் திறப்பதற்கான நடவடிக்கையை எடுப்பது உசிதமாக இருக்கும் என ஆளுநருக்கு நாம் தெரிவித்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .