Princiya Dixci / 2022 மே 17 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு - ஏறாவூர் நகரில் கடந்த 10ஆம் திகதி இரவு வன்முறைகளில் ஈடுபட்ட பிரதான நபர் உட்பட 12 பேரை கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸா தெரிவித்தனர்.
வன்முறைக் கும்பலில் சம்பந்தப்பட்ட மேலும் பலர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக பர் தனது அணியைச் சேர்ந்த ஏனையோரையும் வன்முறையில் ஈடுபடுமாறு கூவி அழைப்பது காணொளிக் காட்சியில் இருப்பதாகவும் இதன் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் மூன்று ஆடைத் தொழில்சாலைகளைச் சேதமாக்கியிருந்ததோடு, முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டின் வாடகைக் கட்டடமான அவரது அலுவலகம் அவரது சகோதரரின் வீடு, சகோதரரின் புதல்வருக்குச் சொந்தமான உணவகம் ஆகியவற்றைத் தாக்கி தீயிட்டும் கொளுத்தியிருந்தனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago