Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் போக்கும் அக்கட்சி அமைச்சர்கள் சிலரது கொள்கைகளும் நடவடிக்கைகளுமே நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதென, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதிக்கான காத்தான்குடி மத்திய குழுத் தெரிவு, காத்தான்குடி அல்-மனார் மண்டபத்தில் நேற்று (30) இரவு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிக்கையில், “தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சீர்செய்ய வேண்டுமாயின், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து புதிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
“நாட்டில் நிலவிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் போன்ற பல காரணங்களுக்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தூர சிந்தனையுடன் இந்தத் தீர்மானத்தை எடுத்தார். அதன்பயனாக நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
“எனினும், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் அந்த இலக்கை நாங்கள் அடைந்தோமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
“தொடர்ந்தும் ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்காமல், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியான ஓர் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். எம்மை விட்டுப் பிரிந்த சகல தரப்புகளையும், சிறுபான்மைக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு எவ்வளவு விரைவாக அதனைச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக அதனைச் செய்ய வேண்டும். அதற்காகவே நாடாளாவிய ரீதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago