2025 மே 14, புதன்கிழமை

ஐ.தே.கவுக்கோ, பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கோ ஆதரவளிப்பதில்லை

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தக் காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கோ  ஆதரவளிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக, கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அத்துடன், சமூக நலன் கருதியும் முஸ்லிம் மக்களுடைய பாதுகாப்புக் கருதியும் எதிர்க்கட்சி வரிசையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்ந்தும் இருப்பதென முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது நிலைப்பாடு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தான் பல்வேறுபட்ட தரப்பினருடன் கலந்துரையாடியதன் அடிப்படையிலும் சமூகத் தலைவர்கள், மார்க்கத் தலைவர்கள், அரசியல் தலைமைத்துவங்களுடன் தான் நடத்திய கலந்துரையாடலின் அடிப்படையிலும் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருந்தாலும் சமூகத்துக்கான தனது பணிகளையும் மக்களுக்கான பணிகளையும் தொடர்ந்து முன்னெடுப்பது எனத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று  (19) மாலை இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குழுக் கூட்டத்திலே, தெளிவானதும் இறுதியானதுமான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .