Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
கனகராசா சரவணன் / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபைக்கு முதன் முதலில் தெரிவுசெய்யப்பட்ட, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் இருவரை, அக்கட்சி மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன், நேற்று (18), மாலை அணிவித்து கௌரவித்தார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மண்முனைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தலில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.
இதில் புதுக்குடியிருப்பு 08ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட கிருஷ்ணசாமி தினேஸ்குமார், 817 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார் என்பதுடன், கிரான்குளம் வடக்கு 09ஆம் வட்டாரத்தில் போட்டியிட்ட தர்மரட்ணம் தயாநந்தளும் வெற்றிபெற்றார்.
வெற்றிபெற்ற இவ்விரு உறுப்பினர்களும், மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் மாவட்ட காரியாலயத்துக்குச் சென்றபோதே, அவர்கள் இருவரையும் மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரன் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.
இப்பிரதேச சபைக்கு தமது கட்சியின் உறுப்பினர்கள் இருவர், முதன்முதலில் வெற்றிபெற்றுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினர்.
எனவே, கட்சி உறுப்பினர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றிகள் தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் தமது கட்சி பல பிரதேச சபைகளைக் கைப்பற்றும் எனவும், மகேஸ்வரன் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இப்பிரதேச சபையின் கீழ் உள்ள கிராமங்களின் அடிமட்டக் கட்டமைப்புகளில் பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுப்பது தொடர்பாகக் கலந்துரையாடினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025