2025 மே 10, சனிக்கிழமை

ஐயங்கேணி ஜெயச்சந்திரன் ரீம் சிக்கியது

Princiya Dixci   / 2022 மார்ச் 31 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன்

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், வாள், கோடரி, கைக்குண்டு மற்றும் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் நால்வரை,  இன்று (31) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மொறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி மற்றும் ஐயங்கேணி  பிரதேசங்களில்  வீடுடைப்பு, கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய “ஐயங்கேணி ஜெயச்சந்திரன் ரீம்” என்ற பெயரில் இயங்கிவந்த குழுவைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவால் மேற்படி பகுதிகளில் பெரும் அச்சுறுத்தல் நிலவி வந்துள்ளதையடுத்து, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையில் பொலிஸ் குழு நியமிக்கப்பட்டு, இரவு வேளைகளில் குறித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இக்குழுவினர் பதுங்கியிருந்த இடத்தை இன்று காலை முற்றுகையிட்ட பொலிஸார், நால்வரையும் கைதுசெய்து, அவர்களிடமிருந்த கைக்குண்டு, வாள், கோடரி மற்றும் 8 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள், வவுனியா மற்றும் ஏறாவூர், ஐயங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் 24 மற்றும் 26 வயதுடைய இருவருக்கு எதிராக வீடுடைப்பு, கொள்ளை மற்றும்,வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பாக 19 வழக்குகள் இருப்பதாகவும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், முன்னர் புளொட் அமைப்பில் செயற்பட்டு வந்த  வவுனியாவைச் சேர்ந்தவரிடமிருந்தே கைக்குண்டு மீட்டுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X